Connect with us

முக்கிய செய்தி

அரச சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

Published

on

ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தாபன விதிக்கோவை மற்றும் அரச நிர்வாக சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.அத்துடன், அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்புகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.இந்நிலையில், ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.நிறுவன ரீதியாக குறித்த சுற்றறிக்கை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இடைநிலை மருத்துவ ஊழியர்களின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.