Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி இந்தியா பயணம்

Published

on

 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.

அயல்நாட்டிற்கு முன்னுரிமை மற்றும் சமுத்திர வளம் தொடர்பிலான இந்தியாவின் கொள்கைக்கு இலங்கை மிகவும் முக்கிய பங்காளர் என  இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் மேம்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.