முக்கிய செய்தி
கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலுமான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.தென்மேல் பருவப்பெயர்ச்சி வலுப்பெற்றுள்ளதால், காற்றின் வேகம் அதிகரிக்கும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க, கடற்பிரதேசங்களின் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதனால் கடற்றொழிலில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.