முக்கிய செய்தி
2023 A/L பரீட்சைக்கு ஒன்லைன் விண்ணப்பங்கள் கோரல்!
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக 7 ஆம் திகதி முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic அல்லது மொபைல் செயலியான ‘DoE’ மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்கள் வழிமுறைகளை சரியாக படிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த அதிபர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பின்னர், குறித்த அச்சிடப்பட்ட நகலை தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.