Connect with us

முக்கிய செய்தி

கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

Published

on

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த நிலைமை ஏற்ப்பட்டுள்ளதாக பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இவ்வருடத்தில் 2,138 டெங்கு சந்தேக நபர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் குருந்துவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கொழும்பு நகரில் அதிகளவான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

கொழும்பில் டெங்கு நோய் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *