முக்கிய செய்தி
மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வங்கிகளின் நடவடிக்கை குறித்து மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதன் படி இதன் நன்மைகளை பொது மக்களுக்கு பெற்றுத்தராத வங்கிகள் தொடர்பில் தேவையான ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
நேற்றையதினம் (06.07.2023) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை 200 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 11 சதவீதம் மற்றும் 12 சதவீதமாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டரீதியான கையிருப்பு வீதத்தை நிலவும் 4.00% அளவிலேயே பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளது.
இதேவேளை, கடந்த மே மாதம் 31 ஆம் திகதியன்று, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தனது கொள்கை வட்டி வீதங்களை பாரியளவில் குறைக்க தீர்மானித்திருந்தது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 250 அடிப்படை புள்ளிகளால் 13.00 சதவீதம் மற்றும் 14.00 சதவீதம் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.