முக்கிய செய்தி
நெல்லிற்கான விலையை அதிகரிக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
விவசாயிகளின் விவசாயத்திற்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் நெல்லிற்கான விலையினை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்று (06.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அரசியல் நாடகத்தினை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர்.மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.தற்போது அறுவடைகாலம் தொடங்கியுள்ளதன் காரணமாக உடனடியாக நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் நெல்லின் விலையானது அதிகரிக்கப்பட வேண்டும். இதே போன்று கிரிமிநாசினிகளுக்கான விலைகள் குறைக்கப்பட வேண்டும்.