முக்கிய செய்தி
நாட்டிலுள்ள இரண்டு யானைகள் குறித்து தாய்லாந்து அரசு கவனம்
இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மேலும் இரண்டு யானைகள் தொடர்பிலும் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .யானைகளின் உடல்நிலை குறித்து ஆராய்வதற்காக கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவொன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன .இவ்வாறானதொரு பின்னணியில் முத்துராஜா இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையாக இருபத்தி இரண்டு வருடங்களாக நாட்டில் தங்கியிருந்த முத்துராஜா யானையை கடந்த 2ஆம் திகதி தாய்லாந்துக்கு கொண்டு செல்ல அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
முத்துராஜாவுக்கு அங்கு சிறப்பு கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது