முக்கிய செய்தி
கண்ச்சத்திர சிகிச்சைக்குள்ளான பெண் மரணம்
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு உள்ளான பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகையில், பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் பின்னர் சுயநினைவின்றி உயிரிழந்துள்ளதாக நேற்று (05) தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும், மரணம் சந்தேகத்திற்குரியது எனவும் சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.