முக்கிய செய்தி
35 இலட்சம் நுகர்வோருக்கு 55% மின்சார விலைச் சலுகை வழங்க தீர்மானம்
60 இலட்சம் நுகர்வோரில் 35 இலட்சம் நுகர்வோருக்கு 55% மின்சார விலைச் சலுகையை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார விலை திருத்தத்தின் போது மத ஸ்தலங்கள் மற்றும் கைத்தொழில் துறைக்கு நிவாரணம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், புதிய மின்சார திட்டங்களை ஆரம்பிக்க தேவையான சூழல் இதுவரை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.அத்துடன், மின்சார சபையின் நட்டம் 409 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.