Connect with us

முக்கிய செய்தி

எரிவாயு விலை மீண்டும் குறைவடைகிறது

Published

on

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது.

கடந்த மாத திருத்தம் போன்று இம்முறையும் எரிவாயுவின் விலை குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் படி,12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதன்படி தற்போது அதன் விலை 3,186 ரூபாவாக காணப்படுகிறது.

5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 598 ரூபாவாகும்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.