முக்கிய செய்தி
உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டங்களில் மாற்றம்
உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியவை உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்கும் வகையில் திருத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மாற்று யோசனைகள் மேலும் கூறுகையில், உள்நாட்டு இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியவை திருத்தப்படும்.இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்காலத்தில் அனைத்து ஓய்வூதிய நிதியங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.அந்த கலந்துரையாடல்களின் பின்னர் மாற்று யோசனைகள் இருந்தால் பரிசீலிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.