முக்கிய செய்தி
லாப்ஸ் கேஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
லாப்ஸ் கேஸ் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லாப் எரிவாயுவை தடையின்றி வழங்குவதாக அந் நிறுவனம் உறுதியளித்துள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், லாப்ஸ் கேஸ் தற்போது அதிகபட்ச திறனில் இயங்கி வருகிறது, அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவுக்கு அதிகமான எரிவாயு உள்ளது என்பதை உறுதி செய்வதற்காக நாடளாவிய ரீதியில் விநியோகித்து வருகிறது.லாப்ஸ் கேஸ் தனது சரக்குகளை மூலோபாய ரீதியாக திட்டமிட்டு, நாடு முழுவதும் சீரான மற்றும் நம்பகமான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்வதற்காக வலுவான விநியோகச் சங்கிலி மேலாண்மை அமைப்புகளை செயற்படுத்தியுள்ளது,” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உள்நாட்டு நுகர்வோர், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கான எரிவாயு சிலிண்டர்களை இப்போது நாடளாவிய லாப்ஸ் கேஸ் விநியோகஸ்த்தர்கள் மூலம் சிரமமின்றி கொள்வனவு செய்ய முடியும் என அது மேலும் குறிப்பிட்டுள்ளது.“தேவையான எரிவாயுக்கள் Mabima மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து 31 விநியோகஸ்தர்களுக்கு நாளாந்தம் வழங்கப்படுகின்றன. அத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மறுவிநியோக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.“வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள லாப்ஸ் கேஸ் விநியோகஸ்தர்கள் அல்லது 1345ஐ டயல் செய்வதன் மூலம் லாப்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு சேவையைத் தொடர்பு கொண்டு எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும் இடங்களை பற்றி விசாரிக்கலாம்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.