முக்கிய செய்தி
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் வழங்கவுள்ள உலக வங்கி
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளதாக பிரபல ராய்ட்டர்ஸ் இணைய தளம் தெரிவித்துள்ளது.வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட மொத்தத் தொகை 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இதில் 200 மில்லியன் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.