முக்கிய செய்தி
சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைது
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம் . பியரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கு அமைய பொலிஸ் குழுவொன்று உடகம பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய போது நாட்டுத் துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.அத்துடன் கொட்டியாகல நக்கல மொனராகலை பகுதியை சேர்ந்த 53வயதுடைய நபர் ஒருவரையும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்அத்துடன் நேற்று மாலை ஆக்கரத்தனை பகுதியில் முகாம் இட்டுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை தொழம்புவத்த பகுதியில் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையில் போது வெடிமருந்து நிரப்பிய சுடக்கூடிய துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.அத்துடன் அதே பகுதியை சேர்ந்த 63வயதுடைய நபர் ஒருவரும் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர்களையும் துப்பாக்கியையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்