முக்கிய செய்தி
பேக்கரி பொருட்களின் விலையை காட்சிப்படுத்துவது அவசியம்..!
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்ட பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட்ட போதிலும் நாட்டின் பல பகுதிகளில் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்கான 10 ரூபா விலை குறைப்பு போதாது எனவும் மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.