முக்கிய செய்தி
இலங்கை விமான சேவைகளில் புதிய இணைப்பு
இலங்கை விமான சேவைகளில் புதிய இணைப்பாக சீஷெல்ஸிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கமையை, சீஷெல்ஸில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று காலை விமானமொன்று வருகை தந்தது.இந்த விமானத்தில் 110 பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.சீஷெல்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், வாரத்தின் புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு நாட்டிற்கு வருகை தந்து, மீண்டும் காலை 7.30-க்கு சீஷெல்ஸ் நோக்கி பயணிக்கவுள்ளது.