முக்கிய செய்தி
பிரபல வங்கியில் கொள்ளை முயற்சி !
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இலங்கை வங்கியில் பணம் கொள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதுசந்தேக நபர்கள் இன்று அதிகாலை பிரதான பாதுகாப்பு பெட்டக அறையினுள் நுழைந்து லொக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர்.வங்கி முகாமையாளர் லொக்கரின் கைப்பிடியில் தொலைபேசி இலக்கத்தை இணைப்புச் செய்திருந்தமையால் சந்தேசக நபர்கள் லொக்கரை தொட்டதும் முகாமையாளரின் தொலைபேசியில் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.இதனையடுத்து, வங்கி முகாமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து காத்தான்குடி பொலிஸார் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.இதன்போது குறித்த சந்தேசக நபர்கள் தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.