முக்கிய செய்தி
சாரதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
வவுனியாவில் 2013 ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
வவுனியா, தோணிக்கல் பகுதியை சேர்ந்த நபருக்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வில் இவர்களிடேயே தகராறு ஏற்பட்டுள்ளது.
அடுத்த நாள் காலையில் குறித்த சாரதி சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியாவை சேர்ந்த 2 சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
2018 ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரியொருவரின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது இரு சாரதிகளில் ஒருவர் கொலை செய்தமைக்கான சான்றுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.