Connect with us

முக்கிய செய்தி

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்

Published

on

எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவு முதல் திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபா.95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.மேலும், இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 270 ரூபாய்.மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.மேலும், இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 270 ரூபாய்.