முக்கிய செய்தி
மின்சாரக் கட்டணம் 23 %குறைவு
மின்சாரக் கட்டணம் 23 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பயனை 1,744,000 குடும்பங்கள் அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதுள்ள யூனிட் விலை 0-30 யூனிட் வகைக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் யூனிட் விலை 25 ரூபாவாக மாற்ற புதிய திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக குறைக்க முன்மொழியப்பட்டதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
31 முதல் 60 யூனிட் வரை பயன்படுத்தும் 10,692 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 7% மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0-30 யூனிட்களை பயன்படுத்தும் 15,646 மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணம் ஜூலை மாதத்தில் 23% குறைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல்களுக்கு 29% முதல் 40% வரை மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.