Connect with us

முக்கிய செய்தி

புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது: ஏனையவை தொடர்வதாக தோற்றுகிறது – ரணில்

Published

on

   தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகத் தோன்றுகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின் போது நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளதார்.கொழும்பின் ஊடகத்தகவல் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.இதன்போது பாதுகாப்பு தரப்பில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த வாரம் கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் ஏற்படுத்தப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு வலயம் பற்றிய முறைசாரா கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயிரம் உணவுப் பொதிகள் பற்றிய தகவல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரிய போராட்டத்தின் அச்சத்தைத் தூண்டியதாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்திருந்தன.இதனையடுத்தே வன்முறையை சமாளிக்க படையினரும் காவல்துறையினரும் தயாராக இருந்தனர்.எனினும் எதுவும் இல்லை என்பதால் சுமார் 72 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு பலப்படுத்தல் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது.பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனத்தில் இருப்பவர்கள் உணவு கொள்வனவு அடிப்படையில் மதிப்பீடுகளை மேற்கொள்வது அசாதாரணமானது அல்ல.பிரிவினைவாதப் போரின் போதும் வடக்கில் உள்ள வெதுப்பகங்களை உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்த வரலாறுகள் உள்ளன.அசாதாரண அளவு ரொட்டிகள் தயாரிக்கப்படும் போது அவர்களின் கவனம் தூண்டப்படும்.இதனால், தாக்குதல் நடக்கலாம் என்ற சந்தேகம் படையினர் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டு வந்ததாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.