உலகம்
4 ஆண்டுகள் சிறைவாசம் முடிவடைந்து வெளியில் வரும் சசிகலா…
4 ஆண்டுகள் சிறை தண்டனை இன்றுடன் முடிவடைவதால் விக்டோரியா அரச வைத்தியசாலையில் இருந்தபடியே சசிகலா இன்று விடுதலை செய்யப்படவுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது அங்குள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று முற்றிலுமாக நீங்கியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
66 வயதாகும் சசிகலாவின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சசிகலா இன்று காலை 11 மணி அளவில் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சிறைச்சாலை அதிகாரிகளால் விடுவிக்கப்படவுள்ளார்.
அவர் விடுதலையானதும் விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிப்பதா? அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதா? என்பது குறித்து உறவினர்கள் முடிவு செய்ய உள்ளனர்.
சசிகலா அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்பதால், சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்படுகிறது.
இளவரசியும் சசிகலா உள்ள அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.