Connect with us

Uncategorized

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது – தமிழக முதல்வர்

Published

on

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.


“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அதிமுகவினர் வெளியேறினர் என்பதே உண்மை. மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதநல்லிணக்கம், மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கவில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை பாதுகாக்க இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம்இ ரத்து செய்யப்பட வேண்டும்.

ந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது. நாட்டுக்கு அகதிகளாக வருவோரை மதரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் உள்ளது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளேன்” என்றார்.