Connect with us

உலகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி

Published

on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.

அனைத்து மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியதுடன், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இந்த நிலையில், வெற்றிக்கு முழு காரணம், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். இது தேர்தல் உறவாக மட்டுமல்ல, கொள்கை அளவில் உறவு உள்ள காரணத்தினாலேயே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், அதனைத்தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தல், தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்ற தேர்தல்களில் இந்த கூட்டணி அமைந்து, பல வெற்றிகளை நாம் கண்டுள்ளோம். அதேபோல கூட்டணி கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும், பிரசாரமும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம் ஆகும் என திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமாக மு.க ஸ்டாலின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.