Connect with us

உலகம்

58 கோடி ரூபா செலவில் மெரினா கடற்கரையில் ஜெயின் நினைவிடம்

Published

on

சென்னை, மெரினா கடற்கரையில், 58 கோடி ரூபாயில், பிரமாண்டமாக கட்டப்பட்ட, ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தவர் ஜெயலலிதா.
அவர் அ.தி.மு.க., பொதுச் செயலராகவும், நான்கு முறை முதல்வராகவும் இருந்து, பல சாதனைகள் படைத்தவர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி மறைந்தார்.

அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில், எம்.ஜி.ஆர். சமாதிக்கு கிழக்கு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

இவ்விடத்திற்கு, ‘எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடம்’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, டிசம்பர் 6 இல் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடம் கட்ட, 2018 மே, 7 ஆம் திகதி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

அதன்பின், 50 ஆயிரத்து, 422 சதுர அடி பரப்பளவில், பொதுப்பணி துறை வாயிலாக, ஜெயின் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஜெ, நினைவிடத்தில், மூன்று கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், பீனிக்ஸ் பறவை தோற்றத்திற்குள் அமைந்துள்ளது.

இடது பக்கத்தில் அருங்காட்சியகம், வலது பக்கத்தில் அறிவுசார் மையம் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளளது.

நினைவிடத்தில், விலை உயர்ந்த கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில், ‘மக்களால் நான், மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி’ ஆகிய, ஜெயலலிதாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

நினைவிட வளாகத்தில், புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான மலர் செடிகளும் நடப்பட்டுள்ளன.

இரவில் நினைவிடம் ஜொலிக்கும் வகையில், வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.