Connect with us

உலகம்

ஜெயக்குமாருக்கு நிபந்தனை பிணை

Published

on

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலையான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்க சென்னை புழல் சிறை முன்பாக மேள தாளங்களுடன் அதிமுகவினர் குவிந்திருந்தனர்.

திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து கண்டோன்மென்ட் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராகவேண்டும் என ஜெயக்குமாருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை தி.மு.க திட்டமிட்டு கைது செய்தாக கூறினார்.

சென்னை மாநகராட்சி தேர்தலின் போது தி.மு.க. ஆதரவாளர் ஒருவரை தாக்கியதாக ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர் கைதானார்.

ஜெயக்குமார் ஏற்கனவே 2 வழக்குகளில் பிணை பெற்றுள்ள நிலையில், நேற்று 3 ஆவது வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார், சென்னை புழல் சிறையில் இருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.