Connect with us

முக்கிய செய்தி

நிட்டம்புவவில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்

Published

on

05.05.2023 இன்று கண்டியில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து மூதூர் நோக்கிச் செல்லும் லங்காம பேருந்தும் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுகம பகுதியில் டிடிகே வளைவுக்கு அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதிகள் இருவர் மற்றும் 07 பெண்கள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளதுடன் 23 பேர் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையிலும் 04 பேர் வரக்காபொல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 06 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.