முக்கிய செய்தி
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கினிகம பகுதியில் 80 வயதான பெண்ணொருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட எந்தரமுல்ல – அக்பார்டவுன் பகுதியில் 81 வயதான ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கினிகம பகுதியில் உயிரிழந்த பெண், கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசியை சேலுத்திக்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி நிஹால் கமகே குறிப்பிட்டுள்ளார்.