முக்கிய செய்தி
பொகவந்தலாவ – பொகவானை பகுதியில் தேயிலை மலையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
பொகவந்தலாவ – பொகவானை பகுதியிலுள்ள, தேயிலை தோட்டப்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தேயிலை தோட்டத்தில், இன்று முற்பகல் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதேபகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக, டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.