முக்கிய செய்தி
கொரோனா தொற்று காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரானா தொற்று காரணமாக மாத்தறையை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்
கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் முகக்கவசம் அணிவதுடன் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.