முக்கிய செய்தி
உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை இல்லை -உலக வங்கி
உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது,இதன் காரணமாக இலங்கை அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இல்லை என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.உலக வங்கி தனது சமீபத்திய மதிப்பீட்டில், லெபனான் நாட்டிலேயே அதிக உணவு விலை பணவீக்கம் காணப்படுவதாக கூறியுள்ளது.261 சதவீதத்துடன் லெபனான் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் சிம்பாப்வே மற்றும் அர்ஜென்டினா முறையே இரண்டாவது உள்ளது .