முக்கிய செய்தி
நகர நெரிசலைக் குறைப்பதற்காக கொழும்பு நகருக்கு பல மாடி வாகன நிறுத்துமிடங்கள்
எட்டு தளங்கள், 300 பார்க்கிங் கொள்ளளவு…
கொழும்பு 02, யூனியன் பிளேஸில் முதலாவது வாகன தரிப்பிடம் திறக்கப்பட்டுள்ளது…
தினமும் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகன தரிப்பிடங்கள் நான்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த வாகன தரிப்பிடங்களை நிர்மாணிக்கவுள்ளது.
இவற்றில் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினாலும் மற்றைய இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் தனியார் நிறுவனத்தினாலும் நிர்மாணிக்கப்படும்.
கொழும்பு டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக, நாரஹேன்பிட்டி, பழைய மீன் சந்தை பகுதிகளில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.
அவற்றில், தனியார் துறையினரின் பங்களிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு 02, யூனியன் பிளேஸ் பொது வாகன தரிப்பிடம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் நேற்று (25) பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் 1,400 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வாகனத தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் உரிமையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்படுகிறது.
இந்த எட்டு மாடி வாகன நிறுத்துமிடம் சுமார் 300 வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்டது. க வாகனத தரிப்பிடத்தின் செயல்பாடு கணினிகள் மூலம் செய்யப்படுகிறது. இதில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதாந்த வருமானத்தில் பெறப்படும் வருமானத்தில் 20% நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.