முக்கிய செய்தி
ஜூன் முதலாம் திகதி முதல் தடை
ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குறுகிய காலத்திற்கு பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த இறக்குமதி தடை அமுலுக்கு வரவுள்ளது.இதன்படி, எதிர்வரும் காலங்களில் பிளாஸ்ரிக்கினால் உற்பத்தி செய்யப்படும் அன்றாட பாவனைப் பொருட்களை இறக்குமதி செய்வதில் தடை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,கடந்த காலங்களிலும் பல முறை, சுற்றாடல் அமைச்சினால் பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.