Connect with us

முக்கிய செய்தி

போலி இணையத்தள வீசா மோசடி

Published

on

போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.கொழும்பில் உள்ள இந்திய விசா நிறுவகத்தின் கிளையொன்று கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் அமைந்துள்ளதுடன், குறித்த சந்தேக நபரால் அந்த நிறுவனத்தின் தகவல்களுடன் இணையத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.சில காலமாக வீசா வழங்குவதாக மக்களிடம் மோசடியாகவும் பணம் பெற்று வந்த சந்தேகநபர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி மாலை வத்தேகம பிரதேசத்தில் மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்வில பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர்.ஆள்மாறாட்டம், மோசடி, அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்கள் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நேற்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.