முக்கிய செய்தி
நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து !
ஹொரண இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்று இன்று காலை (21) தீப்பற்றி எரிந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தீப்பிடித்தவுடன், பயணிகள் வெளியே குதித்து தனது உயிரைக் காப்பாற்றிகே கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஹொரண பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த வேளையிலேயே பஸ் திடீரென தீப்பற்றியுள்ளது .
அப்போது பேருந்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இருந்த போதும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பஸ்ஸின் நான்கு சக்கரங்களைத் தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இயந்திரக் கோளாரூ காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Continue Reading