Connect with us

முக்கிய செய்தி

“அனைவருக்கும் வீடு” திட்டத்தில் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீடுகள் நிர்மாணம்

Published

on

“அனைவருக்கும் வீடு” திட்டத்தில் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீடுகள் நிர்மாணம்

“அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் இவ்வருடம் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது…
 இந்தியாவின்  உதவியில் 760 வீடுகள் கட்டப்படும்…

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” மற்றும் “மிஹிந்து நிவஹன” ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக திறைசேரியில் இருந்து 3,750 மில்லியன் ரூபா…
இந்த ஆண்டு 1500 உரிமைப் பத்திரங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது…
இந்த வருடம் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் இந்த வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்திய உதவி வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 578 மில்லியன் ரூபா செலவில் 760 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உரிய நிதி கிடைத்த பின்னர் இந்த வருடத்திற்குள் வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திறைசேரி நிதியின் கீழ் 76 மில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், 560 அரை சொகுசு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அந்த திட்டத்தின் கீழ், 685 சதுர அடியில் 140 வீடுகளும், மூன்று அறைகள் கொண்ட  420 வீடுகளும் நிர்மாணிக்கப்படும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சி.டி.சி  இன்போர்ஸ்   நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துளாது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு கடந்த வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாத வேலைத் திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்காக திறைசேரியினால் 3,750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

 “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு நாளை” மற்றும் “மிஹிந்து நிவஹன” ஆகிய வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 1500 இற்கும் மேற்பட்ட உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கான திட்டங்களையும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தயாரித்துள்ளது.
காணி ஆணையாளர் அலுவலகம் மற்றும் காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துடன் ஒன்றிணைந்து உரிமைப் பத்திரங்கள் வழங்குவது தொடர்பான பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *