Sports
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி, மொத்த பரிசு தொகை குறித்த பட்டியல்
கட்டாரில் நடைபெறும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் பரிசு தொகை விபரம் வெளியாகி உள்ளது.
மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும்.
இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும்.
2018-ம் ஆண்டு ரஷியாவில் வழங்கப்பட்ட பரிசு தொகை ரூ.3258 கோடியாகும்.
32 நாடுகளை சேர்ந்த 831 வீரர்கள் போட்டியில் பங்குகொள்ளவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
22வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி வருகிற 20ம் திகதி கத்தாரில் தொடங்குகிறது.
டிசம்பர் 18-ந் திகதி வரை 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடக்கிறது.