Connect with us

Sports

கட்டார் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஈக்குவாடோர் அணி

Published

on

கட்டாரில் நடைபெறும் 2022 உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கட்டார் அணியை ஈக்குவாடோர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது.

போட்டியை நடத்தும் நாடொன்றை எதிர்நாடு உலகக் கிண்ண போட்டிகளின் முதல் போட்டியில தோற்கடித்தமை இதுவே முதன்முறையாகும்.

போட்டி தொடங்கிய 16வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை ஈகுவடார் அணியின் வேலன்சியா கோலாக மாற்றினார்.

தொடர்ந்து, 31வது நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தினார்.

இதனால் முதல் பாதியில் ஈகுவடார் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.