Connect with us

Sports

FIFA-பெண் நடுவர்கள்

Published

on

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் கட்டாரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதில் இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்கின்றன.

முதல் போட்டியில் தொடரை நடத்தும் கட்டார் ஈக்வடோருடன் மோதவுள்ளது.
தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஆரம்பமாகவுள்ள தொடர் அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளளது.

இதேவேளை இந்த உலகக் கிண்ண காற்பந்தாட தொடரில் முதல் தடவையாக 3 பெண் நடுவர்கள் மத்தியஸ்தம் வகிக்ககவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.