Sports
மஹிந்த ராஜபக்ஸ தேசிய கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ள விடே பிரதநிதி

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாட்டை வந்தடைந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்தார்.
அவரை வரவேற்பதற்காக, இலங்கை வெளிவிவகார அமைச்சு, விளையாட்டு அமைச்சு மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளன அதிகாரிகள் விமான நிலையத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 5 உயர் அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தேசிய கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிக்கு விசேட அதிதியாக பங்கேற்கும் வகையிலேயே அவர் வருகைத் தந்துள்ளார்.