Connect with us

Sports

FIFA உலகக் கிண்ணம் இன்று ஆரம்பம்

Published

on

FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இன்று (20) கட்டாரில் ஆரம்பமாகவுள்ளது. 

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் இவ்வருடம் கட்டாரின் அனுசரணையில் நடைபெறுகிறது.

இத்தாலி , அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பெல்ஜியம், ஸ்பெய்ன், இங்கிலாந்து உள்ளிட்ட 32 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன. 

தொடர்  அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளளது.

தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இலங்கை நேரப்படி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன.

இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

A பிரிவு – கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

Bபிரிவு – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

C பிரிவு – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

D பிரிவு – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

E பிரிவு – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

F பிரிவு – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

G பிரிவு – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

H பிரிவு – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.

இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும்.