Sports
தனுஷ்கவிற்கு நிபந்தனை பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தனுஷ்கவின் இரண்டாவது பிணைக் கோரிக்கை இன்று (17) சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி தனுஷ்கவை 150,000 டொலர் பெறுமதியான பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணத்திலக்க தினமும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தினமும் இரவு 09 மணி தொடக்கம் மறுநாள் காலை 06 மணி வரை பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் தரப்பு தொடர்பில் தொடர்புகளை பேணுவதற்கும் சந்திப்புகளுக்கான செயலிகளை பயன்படுத்தவும் தனுஷ்க குணத்திலக்கவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.