Connect with us

உள்நாட்டு செய்தி

ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் – மோடி

Published

on

அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், “அடுத்த 25 ஆண்டுகள் தேச வளர்ச்சியில் மிகவும் முக்கியமானது. இந்த 25 ஆண்டுகளை இளைஞர்கள் தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டுகிறேன்.

நாம் நம் தேச விடுதலைக்காகப் போராடியவர்கள் கண்ட கனவை நனவாக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.

நம் நாடு இன்னும் 25 ஆண்டுகளில் வளர்ந்த தேசமாக இருக்கும். அதற்கு நாம் ஐந்து உறுதிமொழிகளை ஏற்க வேண்டும். முதலாவது நாம் பெரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும். அந்த இலக்கு இந்தியாவை வளர்ந்த தேசமாக்குவது. இரண்டாவது உறுதிமொழி, எல்லா வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும். மூன்றாவது நமது பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும். நான்காவதாக, ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றுக் கொள்வோம். கடைசியாக நாம் ஏற்க வேண்டிய ஐந்தாவது உறுதிமொழி குடிமகனின் கடமைகளை ஆற்றுவது. முதல்வர்களுக்கும், பிரதமருக்கும் கடமை இருக்கிறது.