Connect with us

உலகம்

இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்:பிரதமர் மோடி

Published

on

இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய அரசின்பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அப்போது இலங்கையில் நிலவும் சூழல் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

“இலங்கை சிரமமான சூழ்நிலையை கடந்து கொண்டிருக்கிறது. அங்கு நிலவும் தற்போதைய சூழல் உங்களுக்கு நிச்சயம் கவலையளிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்துவிதமான உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது.

நிதி, எரிபொருள், உணவு, மருந்துகள், பிற அத்தியாவசிய பொருட்களும் இதில் அடங்கும். இலங்கைக்கு பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாக சர்வதேச மன்றங்களில் இந்தியா உரக்க பேசி இருக்கிறது. ஜனநாயகம், சிரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். தொடர்ந்து அந்த நாட்டுக்கு உதவுவோம்”.