Connect with us

உள்நாட்டு செய்தி

நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று இலங்கை வரவுள்ளது

Published

on

தமிழக அரசு வழங்குவதாக உறுதியளித்த நிவாரணப்பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று (18) சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை வரவுள்ளது.

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டொன் அரிசி, ரூ.15 கோடி மதிப்பிலான 500 டொன் பால் மா, 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஏற்றி வரப்படவுள்ளன.