Connect with us

Helth

காலி கல்வி வலய பாடசாலைகள் குறித்த தீர்மானம்

Published

on

கொவிட் எச்சரிக்கை காரணமாக காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தென்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. காலி மாவட்டத்தில் 26 பாடசாலைகள் கடந்த வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

இதேவேளை, 2021ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்துருவ பிரதேசத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக கொவிட்-19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

துந்துவ மேற்கு மற்றும் துந்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

பெந்தரப் பிரதேசத்தில் தொற்றுக்கு இலக்கான 41 பேர் இனங்காணப்பட்டிருப்பதாக துந்துவ பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.