உள்நாட்டு செய்தி
பிரதமர் இருக்கும் இடத்தை அறிவித்தார் – பாதுகாப்பு செயலாளர்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர் அவர் செல்ல விரும்பும் இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
“சகல மக்களினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது கடமை. ஆகவே பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் அவர் அங்கிருந்து விரும்புமான இடத்திற்கு செல்ல பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்.” என்றார்.