உள்நாட்டு செய்தி
பயணத்தடை நீடிப்பு
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று (10) இரண்டாவது நாளாக பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.