Connect with us

உலகம்

உக்ரைனில் போரால் ஏற்பட்டுள்ள கொடூரத்தை நேரடியாக கண்டேன்

Published

on

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடோ, உக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரேன் மீது ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா பிரதமரின் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களை நடத்தி வரும் உக்ரேனுக்கு கனடா, பிரித்தானியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றன.

இந்தநிலையில், கடுமையான போர் உக்ரேனில் நடந்து வரும் சூழலில் கனடா பிரதமர் யுக்ரைனுக்கான விஜயத்தினை மேற்கொண்டு அந்த நாட்டு ஜனாதிபதி வொளெடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.